சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகமெங்கும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். ஓமலூரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ஓமலூர் அதிமுகவின் கோட்டை என்று கூறினார். 80 களின் பிற்பகுதியிலும், 1991 தேர்தல்களிலும் பிளவு ஏற்பட்டபோதும் ஒமலூர் மக்கள் அதிமுக-வுக்கு ஆதரவாக நின்றனர் என்று அவர் கூறினார். சி.என்.அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது போல, முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தான் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

’வெற்றிநடை போடும் தமிழகமே’ என்ற சொற்றொடரைக் கேட்டு கலங்கிய மு.க.ஸ்டாலின் (MK Stalin), தன்னைப் பற்றிய வதந்திகளைப் பரப்ப முயன்றதாக பழனிசாமி கூறினார். “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி யார் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று, அவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று என்னைப் பற்றி பேசுகிறார். என் பெயரை எடுக்காமல் அவருக்கு தூக்கம் வராது போல இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சிறந்த தலைவர்களிடமிருந்து நாங்கள் அரசியல் கற்றுக்கொண்டோம். அவர்கள் மாநிலத்திற்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள், நாங்கள் அவர்களின் பாதையை பின்பற்றினோம். ஆகவே "ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அவர்களால் அதிமுகவைத் தோற்கடிக்க முடியாது” என்று இடி மழையாய் பொழிந்தார் முதல்வர் பழனிசாமி. மக்கள் ஸ்டாலினை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் அவருக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார் தமிழக முதல்வர். 


சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தரமான சாலைகள், ஃப்ளைஓவர்கள் மற்றும் சோதனைச் சாவடிகளை இங்கு அமைத்துள்ளோம். குடிமராமத்து திட்டங்களின் மூலம், அனைத்து ஏரிகளும் குளங்களும் இப்போது நிரம்பியுள்ளன” என்று அவர் கூறினார். நிலமற்றவர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. அவர்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். 


ALSO READ: சீமான் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!


பழனிசாமி (Edappadi K Palaniswami) மேலும் கூறுகையில், “இப்போது, ​​தமிழகம் அமைதியான மாநிலமாக உள்ளது. உள்ளூர் நிர்வாகம், சுகாதாரம், விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நூற்றுக்கணக்கான விருதுகளை நாம் பெற்றுள்ளோம். திமுக ஆட்சியின் போது மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போது நாம் உபரி மின்சாரத்தை உருவாக்கி வருகிறோம். நாங்கள் சேலத்தில் ஒரு ஜவுளி பூங்காவையும் கொண்டு வர உள்ளோம். " என்றார்.


முன்னதாக, தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பழனிசாமி, அதிமுக எப்போதும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார். தவறான பிரச்சாரம் மற்றும் பொய்கள் மூலம் தங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை சீர்குலைக்க முயன்றதற்காக ஸ்டாலினையும் அவர் கண்டித்தார்.


பாலகோடில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பழனிசாமி, “ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் பொய்களை அடிப்படையாகக் கொண்டுள்ளார். ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக, அவரது நடவடிக்கைகள் நல்ல தலைமையை பிரதிபலிக்கவில்லை. சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியில் அவர் தவறான செய்திகள் மற்றும் பொய்கள் மூலம் மத்திய அரசை வில்லனாக காட்ட முயல்கிறார்” என்றார். 


அதிமுக சிறுபான்மையினரின் நலனை எப்போதும் காத்து வருவதாகக் கூறிய பழனிசாமி, தனது அரசு ஹஜ் யாத்திரைக்கான நிதியை ஆண்டுக்கு ரூ .10 கோடியாக உயர்த்தியுள்ளது என்று கூறினார். "அவர்களுக்கு இதை ஒரு சுலபமான பயணமாக மாற்றுவதற்காக, நாங்கள் தற்போது சென்னையில் ரூ .15 கோடியில் ஒரு விடுதி கட்டி வருகிறோம். மசூதிகளை புதுப்பிக்க ரூ .5 கோடியும் வழங்கியுள்ளோம். எங்கள் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் முதல்வர்.


பென்னாகரத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வியில் சேருவது கணிசமாக மேம்பட்டுள்ளது என்றார். கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூரில் ஒரு பேரணியை நடத்திய அவர், 2019 ஆம் ஆண்டில் 304 நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றார். "இந்த ஒப்பந்தங்களின் பயனாக ஓசூரில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்," என்று அவர் கூறினார்.


ALSO READ: தேசிய கொடி சித்தரிக்கப்பட்டுள்ள கேக்கை வெட்டுவது குற்றம் அல்ல : நீதிமன்றம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR