தமிழகம் முழுவதும் மொத்தம் 7133 வேட்புமனுக்கள் பரிசீலனை!
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகம், புதுச்ரேி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ககரூர் சட்ட பேரவைத் (Assembly Elections) தொகுதியில், அதிக பட்சமாக 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக 59 பேர் போட்டியிடுகின்றனர். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palanisamy) போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ALSO READ: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்
தேர்தல் நடக்க சுமார் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமுக, திமுக தவிர, இந்த தேர்தலில், பாஜகவும் (BJP) முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளதால், இந்த தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளை கொண்ட வித்தியாசமான தேர்தலாக உள்ளது என்றால் மிகையில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். மயிலாப்பூர் தொகுதியில் ஒரு திருநங்கையும், மதுரை தெற்கு தொகுதியில் 2 திருநங்கைகளும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணியுடன் முடிவடைந்து விட்டது. அதிமுக (AIADMK), திமுக (DMK) வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 2 மனுக்களுக்கு மேல் தாக்கல் செய்திருந்தனர். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வேட்பாளர் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால் அதற்கு ஏற்றார் போல் பிரமாணபத்திரத்தில் தேவையான விவரங்களை குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எத்தனை மனுக்கள் தள்ளுபடியாகி உள்ளது என்ற விவரம் இன்று மாலை வெளியிடப்படும்.
ALSO READ: மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR