தேர்தல் வேட்பாளர்களுக்கு கொரோனா; டிஜிட்டல் பிரச்சாரத்தில் இறங்கும் வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தினத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்ட பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து. புதிய அரசியல்வாதிகள் டிஜிட்டல் தளத்தில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தினத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, கோவிட் -19 (COVID-19) தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், பிரச்சாரங்கள் டிஜிட்டல் தளத்தில் தொடரும் என்று அவர்கள் வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 1,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசகராக பணியாற்றிய வி பொன்ராஜ், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக , அவர் நேர்மறையை சோதித்ததாக அறிவித்தார். சென்னை நகரில் உள்ள அண்ணா நகர் தொகுதியில் இருந்து போட்டியிட பொன்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த வார இறுதியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது அவருடன் இருந்தார்
தேர்தலுக்கு முன்னர் மக்களை மீண்டும் களத்தில் சந்திக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அது வரையில், மக்கள், சமூக ஊடகங்கள், டிவி மற்றும் யூடியூப் மற்றும் ஜூம் ஆகியவற்றை தொடர்ந்து சந்திப்பேன் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த வாரம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள வேளச்சேரி தொகுதியில் இருந்து போட்டியிடும் வேட்பாளரான அவர், வாக்காளர்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இருப்பினும் டிஜிட்டல் தளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவரது அணிகள் மக்களை சென்று சந்திப்பதாகவும் அவர் கூறினார்.
ஏறக்குறைய 150 இடங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மையம், மாநிலத்தின் இரு முக்கிய திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. கமல்ஹாசன் கோவையில் தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தில் புதிதாக 1,289 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. 7,903 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ALSO READ | Sputnik V தயாரிக்கும் பெங்களூரு நிறுவனம்; COVID தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறும் இந்தியா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR