நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; தாராபுரம் வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரச்சாரம்
தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கடைசி கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முழு முனைப்புடன் நடந்து வருகின்றது. மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தில் நாளை நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி ( PM Narendra Modi) பங்கேற்க உள்ளார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா (JP Nadda) , மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
ALSO READ | முதல்வர் பழனிச்சாமி குறித்த சர்ச்சை பேச்சு; ஆ.ராசா மீது காவல் துறை வழக்குப் பதிவு
இது தவிர, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு, விருதுநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்வார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் வேட்பாளர் அண்ணாமலைக்காக பிரசாரம் செய்ய இருக்கிறார்.
இது தவிர, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 1 ஆம் தேதி திருக்கோவிலூர், கோவை தெற்கு தொகுதிகளிலும், 3 ஆம் தேதி குளச்சல் மற்றும் விருதுநகரிலும் பிரசாரம் செய்வார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும்.
ALSO READ | பங்குனி உத்திரம்: வெற்றி வேல்! வீர வேல்! என அமித் ஷா, ஜே.பி.நட்டா தமிழில் வாழ்த்து
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR