தமிழ் நாட்டில் இன்று பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனியில், உத்திர நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்படும் ‘பங்குனி உத்திரம்’ திருவிழாவில் முருக பெருமானை வணங்குகின்றனர். முருக பக்தர்கள், இன்று முருகனை வேண்டி காவடி தூக்கி, வேல் குத்தி வழிபாடு நடத்துகின்றனர். இன்றைய தினத்தில் மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
முக்கியமாக இன்று அறுபடை வீடுகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) மற்றும், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா (JP Nadda) ஆகியோர், தமிழ்நாட்டு மக்களுக்கு பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வேல்! வீர வேல்!
— Amit Shah (@AmitShah) March 28, 2021
தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வலமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வேல் வேல் வெற்றி வேல்
— Jagat Prakash Nadda (@JPNadda) March 28, 2021
ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR