இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பல வித வினோத நிகழ்வுகளும் நடந்தேறின. அதில் விளம்பரங்கள் வெளியிடுவதில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளுக்கும் இடையே இருந்த மிகக்கடுமையான போட்டி அதிகமாக பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது இந்த இரு கட்சிகளும், செலவு செய்த விபரங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளன. அதைப் பற்றிய விவரங்கள், தேர்தல் கமிஷன் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.-வுக்கு (DMK) தேர்தல் வியூகத்தை வகுத்துக்கொடுத்த 'ஐபேக்' நிறுவனத்துக்கு, அக்கட்சி மிகப்பெரிய தொகை கொடுத்ததாகத் தகவல் வெளிவந்திருந்தது. ஆனால் தேர்தல் கமிஷனில் தி.மு.க., தாக்கல் செய்துள்ள கணக்கில், 'இண்டியன் பேக்' என்ற அந்த நிறுவனத்துக்கு ஐந்து கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டிருக்குது. 


தேர்தலில், வேட்பாளர்களுக்கு மட்டும் 48 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி, தி.மு.க. தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. நாளிதழ், டிவி மற்றும் சமூக ஊடகங்களில் செய்த விளம்பரங்களுக்கு 39 கோடியே 78 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளதாக தி.மு.க. கணக்குக் காட்டியுள்ளது.  'ஸ்டாலின்தான் வாராரு' விளம்பரம் வருவதற்காக கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு 2 கோடியே 28 லட்ச ரூபாயை தி.மு.க., கட்டணமாகச் செலுத்தியுள்ளது.


ALSO READ: ஓபிஎஸ் ஒரேபோடு.. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்!


முதல்வர் மு.க ஸ்டாலினின் (MK Stalin) ஹெலிகாப்டர் செலவு மட்டுமே, இரண்டே கால் கோடி ரூபாயாக்கு அருகில் உள்ளது. போஸ்டர், பேனர், கட் அவுட், விளம்பரப் பலகைகள், பல்க் எஸ்.எம்.எஸ் ஆகியவற்றுக்காக சுமார் 12 கோடியே 34 லட்ச ரூபாயை தி.மு.க., தலைமை செலவிட்டுள்ளது. மொத்தமாக 114 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷனில் தி.மு.க. தாக்கல் செய்துள்ள செலவினப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மறுபுறம், தி.மு.க., செய்துள்ள செலவில், சரியாக பாதி தொகை, அதாவது 57 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக அ.தி.மு.க. கணக்குக் காண்பித்துள்ளது. இதில் விளம்பரத்துக்காக மட்டுமே, 56 கோடியே 65 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரச் செலவில், அதிகபட்சமாக சமூக ஊடகங்களுக்காக, 11 கோடியே 84 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. 


மேலும், மற்றொரு சுவாரசியமான விஷயமும் அ.தி.மு.க. (AIADMK) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுடைய சொந்தச் செலவில், பிரசாரத்துக்குச் சென்றதாக கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் மட்டும் ஹெலிகாப்டரில் சென்றதற்கு ரூ.13 லட்சத்து 23 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. 


திமுக-வுக்கு ஆன தேர்தல் செலவில் சரியாக பாதி தொகையையே அதிமுக செலவழித்ததாக கணக்குகள் இருக்க, அதைப் போலவே, தி.மு.க. வெற்றி பெற்றதில் பாதித் தொகுதிகளில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்ற விவரம் விந்தையூட்டுகிறது. அரசியல் ஒரு வினோதம், உண்மைதான்!! 


ALSO READ: வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தமிழக ஆளுநருக்கு அழகிரி வார்னிங்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR