லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட்; AIADMK இளங்கோவன் மீது வழக்குப் பதிவு

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், இருவர் மீது வழக்குப் பதிவு...

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2021, 06:44 AM IST
  • அதிமுகவின் இளங்கோவன், அவர் மகன் மீது வழக்குப் பதிவு
  • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு
  • கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட்; AIADMK இளங்கோவன் மீது வழக்குப் பதிவு

சென்னை: முன்னாள் முதல்வர் கே.பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் என கருதப்படும் நபர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.29.77 லட்சம் ரொக்கம், 10 சொகுசு கார்கள் (ஒரு கூப்பர் மற்றும் ஒரு ஆடி கார் உட்பட), 2 வால்வோ பேருந்துகள், 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், 21.2 கிலோ தங்க நகைகள், 282.383 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி பாஸ்புக்குகள், சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கி டெபாசிட்கள் ரூ.68 லட்சம் சிக்கியதாக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (Directorate of Vigilance and Anti-Corruption) தெரிவித்துள்ளது. 

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் அவரது மகன் இ.பிரவீன்குமார் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை, கோவை, நாமக்கல், முசிறி, திருச்சி, சேலம் ஆகிய தமிழகம் முழுவதும் உள்ள 36 இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22, 2021) சோதனை நடத்தப்பட்டது. ஆர்.இளங்கோவன், அவரது உறவினர்கள் மற்றும் அவர்களின் சார்பாக சொத்துக்கள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நெருங்கிய நண்பர்களின் குடியிருப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். 

Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதுதவிர, அவர்களின் வணிக நிறுவனங்கள் மற்றும் பங்குதாரகளாக உள்ள நகைக்கடைகள், சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் சோதனைகள் நடைபெற்றன.

அதிமுக கட்சிப் பொறுப்பில் இருக்கும் இளங்கோவன், முன்னாள் முதலமைச்சர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைகளுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News