பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு... ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கும் புதிய பொறுப்பு!
Tamil Nadu Latest News Updates: ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வாகி உள்ளார்.
Tamil Nadu Latest News Updates: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (Armstrong Murder) சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலையை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) நடைபெற்றது
இக்கூட்டம் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோரின் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக புதிய மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பார் கவுன்சில் தேர்தல்
மேலும், இளமான் சேகர் மாநில துணை தலைவராகவும், மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு ஆபத்து - எச்.ராஜா!
தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்தன், செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அதில் பார் கவுன்சில் தேர்தல் சமயத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவு பெற்ற வழக்கறிஞர்கள் பெரும்பாலனாவர்கள் இருந்ததாகவும், தோல்வி பயத்தில் இருந்தவர்கள் மீது தற்போது சந்தேகம் எழுவதாகவும் பேசினார். மேலும், ஆற்காடு சுரேஷிற்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதலில் 8 பேர் போலீசாரிடம் சரண்டைந்த நிலையில், அடுத்து மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரையும் முதற்கட்டமாக போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முழு திட்டத்தையும் தீட்டி, ஆயுதங்களை வழங்கியது கைதாகியுள்ள வழக்கறிஞர் அருள் தான் என தெரியவந்தது. மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற சென்ற இடத்தில் கைதான திருவேங்கடம் தப்பிக்க முயன்றார். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாகவும், தற்காப்பிற்காக இரண்டு போலீசார் சேர்ந்து திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தனர்.
இந்த என்கவுன்டர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அருளுக்கும், அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி என்பவருக்கும் அதிக பணபரிவர்த்தனை நடந்துள்ளது. இதில் மலர்கொடியின் உதவியாளர் ஹரிஹரன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ. 1 கோடி வரை முதல்கட்டமாக பணத்தை பறிமாற்றியுள்ளனர். ஹரிஹரன் தமாகா மாநில மாணவர் அணி துணைத் தலைவராகவும் இருந்தவர்.
இதை தொடர்ந்து திமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகன் சதீஷ், திருநின்றவூரை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வராஜ் ஆகியோரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானார்கள். இதை தொடர்ந்து, பிரபல ரவுடியான மறைந்த ஆற்காடு சுரேஷூக்கு நெருங்கிய தோழியான சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்திலுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் போலீசார் அவரை நெருங்கிவருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ