ஒரு இஸ்லாமியரை இந்திய குடியரசு தலைவராக்கியது பாஜக தான்! - அண்ணாமலை பேச்சு
பட்டியல் இனத்தில் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தவர் ஆகியோரை குடியரசு தலைவராக வைத்து அழகு பார்த்தது பாஜக-தான் என அண்ணாமலை பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,
"தமிழக ஆளுநர் அளித்த தேனீர் விருந்தினை மட்டும் முதல்வர் புறக்கணிக்கவில்லை 70-ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்பவனில் சுப்பிரமணிய பாரதியார் சிலையினை தமிழக ஆளுனர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிலையினை திறந்து வைப்பதாக கூறிவிட்டு தமிழக முதல்வர் பங்கேற்காமல் இருந்தது என்பது, சுப்பிரமணிய பாரதியார் பற்றி கவலை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது.
அதைபோல் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 11-கோப்புகள் ஆளுநரிடம் வழங்கினார். ஆனால் அதனை மீண்டும் தமிழக முதல்வருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அதற்கான காரணத்தினையும் கூறி உள்ளார். எனவே தமிழக முதல்வர், ஆளுநர் தெரிவித்த காரணத்தினை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்." என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் இனி நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பலாம் - புதிய அப்டேட்!
தொடர்ந்து பேசும்போது, "நக்குறவர் இனத்தில் பிறந்த மக்களை அமைச்சர் பதவி அளித்து அழகு பார்க்கும் கட்சி என்பது பாஜக மட்டும்தான். அதைபோல் பட்டியல் இனத்தில் பிறந்த மாமனிதரை இந்தியாவினுடைய குடியரசு தலைவராக்கியதும், இஸ்லாமிய மதத்தில் பிறந்த டாக்டர். அப்துகலாம் அவர்களை குடியரசு தலைவராக வைத்து அழகு பார்த்ததும் பாஜக-தான்.
ஆனால் தமிழக முதல்வரை போல் நரிக்குறவர் மக்களை நேரில் சந்தித்து புது தட்டில் சாப்பிட்டுவிட்டு அதன் மூலம் தான் நரிக்குறவர் மக்களுக்கு சொந்தம் என்று பாஜக நிறுபிக்க தேவையில்லை.
அதைபோல் நறிக்குறவ சமுதாய மக்களை பழக்குடியினர் பட்டியலில் சேர்ப்பது என்பது பாஜகா-வால் மட்டும் தான் முடியும்"
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் படிக்க | சென்னையில் 30 நிமிட பயணம் இனி 4 நிமிடத்தில்..! தமிழக அரசின் சூப்பர் பிளான்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G