தமிழக பட்ஜெட் 2022 : `வரையாடு பாதுகாப்புத் திட்டம்” - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் தாக்கலில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஆயிரத்து314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டத்தை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னையில் 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2022-23: நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்
மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மத்திய பட்ஜெட்: தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய அம்சங்கள்!
மேலும், மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், போன்ற நோக்கங்களுடன் "வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை" 10 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR