தூத்துக்குடியில் 40,000 கோடியில் ஆலை அமைக்க TN அமைச்சரவை ஒப்புதல்!
தூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது!!
தூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது!!
சென்னை: தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்னைகள் தொடர்பாக அவ்வப்போது அமைச்சரவை கூடுவது வழக்கம். அதன்படி 2020 ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் மக்கள் நலத்திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வண்ணம் தென்மாவட்டங்களில் புதிதாக 6 தொழில் நிறுவனங்களை அமைக்க ஆலோசிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடியில் சுமார் 40,000 கோடி ரூபாய் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் சீனாவின் வின்டெக் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை நேற்று வழங்கியது.
அதேபோல், ஒற்றை சாளர முறையை முழுவதுமாக நடைமுறைபடுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் வின்டெக்(Vintech) எனும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தை ஸ்ரீபெரும்பதூரில் அமைக்கவும், தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.