கேரளாவில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 78 பேர் தங்கியிருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், 42 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின்  இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 20 வீடுகள் இந்த நில்கச்சரிவில் அடித்து செல்லப்பட்டது.  


ராஜமலா அருகே பெட்டிமுடியில் ஏற்பட்ட பேரழிவினால், வீடுகள் குடியேற்றங்கள் அடித்துச் செல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, புதைந்துள்ள நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களின் உதவியை நாட அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ கூறியுள்ளது.


ALSO READ | பெய்ரூட் அபாயத்தில் தமிழகம் தப்ப.... இடம் மாறுகிறது அமோனியம் நைட்ரேட்... !!!


இறந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்.


இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) ஞாயிற்றுக்கிழமை இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில், மீட்பு நடவடிக்கைகளில் உதவ தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வருக்கு உறுதி அளித்துள்ளார்.


கேரளா முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு  பேசிய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


ALSO READ | கோவை உயிரியல் பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு...!!!


இடைவிடாத மழை, நிலச்சரிவு மற்றும் ஆறுகள் குறுக்கே உள்ள அணைகள் திறக்கப்படுவது  போன்ற காரணங்களால், மத்திய கேரளாவில் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்  தண்ணீர் புகுந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் குமரகம் மற்றும் குட்டநாடு பகுதிகள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.


கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மனார்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் இருந்த நபர் கருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அங்கமாலியைச் சேர்ந்த ஜஸ்டின் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபரை தேடும் பணியை என்டிஆர்எஃப் குழு மீட்புப் பணியை NDRF குழு மேற்கொண்டு வருகிறது


கொரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரித்து தங்க வைக்க அதிகாரிகள் தனி முகாம்களைத் திறந்துள்ளனர். எர்ணாகுளம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,203 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.