கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறும் ஐஐடி மெட்ராஸ்; மேலும் 26 பேருக்கு தொற்று
கோவிட்-19 தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக பரிசோதித்துக் கொள்ளுமாறு ஐஐடி மெட்ராஸ் வளாக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் கோவிட் ஹாட்ஸ்பாடாக மாறியுள்ளது. அங்கு மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, எண்ணிக்கை 171 ஐ எட்டியது.
சென்னை ஐஐடியில் இதுவரை 171 கோவிட்-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் கல்லூரி தற்போது மூடப்படவில்லை என்று சுகாதார செயலாளர் தெரிவித்தார், இருப்பினும், கோவிட் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து, பல்கலைக்கழகத்தின் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் கல்லூரி வளாக அதிகாரிகளுடன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், "ஐஐடி மெட்ராஸில் மேலும் சில வழக்குகள் பதிவாகியுள்ளன. எனினும் பயப்பட ஒன்றுமில்லை. நாங்கள் கல்லூரியை மூடவில்லை. கோவிட் கிளஸ்டர் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். " என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஐஐடி மெட்ராஸ் அதிகாரிகள், கோவிட்-19 தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், தங்களை உடனடியாக பரிசோதிக்குமாறு கேட்டுக் கொண்டனர், மேலும் அனைவரும் மாஸ்குகள் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் மற்றும் அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | IIT சென்னையில் எகிறும் தொற்று பாதிப்பு; மேலும் 32 பேருக்கு கொரோனா
முன்னதாக புதன்கிழமை, ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 111 கோவிட்-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இந்தியாவில் 3,377 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, நாட்டின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,30,72,176 ஆக உள்ளது, அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,801 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா இறப்புகளை பொறுத்த வரை, 60 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது. இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது. சிகிச்சையில் உள்ளவர்கள், மொத்த நோய்த்தொற்றுகளில் 0.04 சதவீதம் ஆகும். அதே நேரத்தில் தேசிய அளவில் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடையும் விகிதம் 98.74 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR