தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா, ஒரே நாளில் 7,819 புதிய பாதிப்புகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுக்கும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான, தகவல்களை தினசரி அடிப்படையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 15, 2021) 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 54 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. இது வரை கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,970 என்ற அளவிலும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,819 பேருக்கு COVID19 பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 3,464 பேர் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர் என்றும், 25 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கொரொனா பரவல், இரண்டாவது அலை தொடங்கி, தொற்று எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக பிரதமர் மோடி (PM Narendra Modi), முன்னதாக மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், நேற்று, மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரென்சிங் மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், தங்கள் மாநிலங்களில் பாதிப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR