சென்னை: கொரோனா தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அச்சத்தில் உச்சம் காட்டிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் 36,000-ஐத் தாண்டு திகிலூட்டிய ஒரு நாள் தொற்றின் அளவு தற்போது, பல்வெறு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செயல்முறை காரணமாக வெகுவாக குறைந்துள்ளது.


தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் இன்று 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்று 217 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 



ALSO READ: 3rd Dose of Corona Vaccine: மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவை?


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,462 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,411 ஆக உள்ளது.


கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,462 ஆக அதிகரித்துள்ளது.  


தமிழகத்தில் இன்று 1,887 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் (Coronavirus Recovery) எண்ணிக்கை 25,30,096 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மொத்தமாக 1,59,564 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,933 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சங்களுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. 


ALSO READ: ICMR: கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR