"தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று சமீப நாட்களாக குறைந்து காணப்பட்டாலும் மூன்றாம் அலை வருவதற்குண்டான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.அப்படி ஒரு வேளை "கொரோனா மூன்றாவது அலை வந்தால் சென்னையை காட்டிலும் கோவையில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும் ,வணிக வரித் துறை ஆணையருமான "எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஏ .சித்திக் அவர்கள் கூறியதாவது: "கோவை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வெறும் 43 சதவீதமே இருக்கிறது.இதுவே சென்னை மக்களுக்கு 78 சதவீதமாக உள்ளது.நோய் எதிப்பு சக்தியானது சென்னையில் உள்ள மக்களை விட கோவையில் இருக்க கூடிய மக்களுக்கு மிக குறைவாக உள்ளது. இப்பொழுது மூன்றாவது அலை வேறு வரவுள்ளதால் கோவை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் கட்டாயம் முககவசம் அணிந்து சென்றுவர வேண்டும்.கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.தனிமனித இடைவெளியையும் கடைபிடித்தல் நல்லது. "இந்த ஒரு மாத காலத்திற்குள் கூட மூன்றாவது அலை வர வாய்ப்பிருக்கிறது.
Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…
முழு ஊரடங்கு இல்லாமல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் தற்போது அமலில் இருந்து வருகிறது.கொரோனா மேற்கொண்டு அதிகம் பரவமால் இருக்க பொதுமக்களாகிய நீங்கள் தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளையும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் முழு ஊரடங்கை தள்ளி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கோவையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும் நிலையில் இதை அதிகப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு. தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. "மூன்றாவது அலை ஒரே மாதத்தில் கூட வர வாய்ப்பு உள்ளது. அதனை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.
"கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அதிகளவில் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே குறைந்த அளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய "சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன.
Also Read | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR
"அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் வென்டிலேட்டர்களும் இருக்கின்றது. "சென்னையிலிருந்து ஆக்சிஜன் டேங்க் ஒன்றும் கோவை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை வரும்பொழுது தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானால் ஒரே வாரத்தில் அதற்கேற்ப படுக்கைகளை உயர்த்தி கொள்வோம்.
கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதால் உயிர் சேதம் அதிகமில்லாமல் கொரோனா மூன்றாவது அலையை நம்மால் எதிர்கொள்ள முடியும்.
"அரசு மருத்துவமனையில் "124 ஆக்சிஜன் படுக்கைகளும் 82 ஐ.சி.யு படுக்கைக்களும் குழந்தைகளுக்கு தயராக உள்ளன. கோவை மாவட்டத்தில் மருத்துவர்களும் தேவையான அளவில் இருக்கின்றனர்.அடுத்த இரண்டு மாத காலத்திற்கு குறிப்பாக பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடனும், கவனமுடன் இருக்க வேண்டும்.என்று தெரிவித்தார்.பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜ் கோபால் சுங்கரா போன்றோர் உடனிருந்தனர்.
Also Read | Covid Updates ஆகஸ்ட் 10: தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR