இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழக முழுவதும் வரும் 30 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமானத்தை அதிகரிக்காத நிலையில் விலைவாசி உயர்வால் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வர முயற்சிகிறது. மின் துறை அரசாங்கத்திடம் வந்த பின்னர் தான் கிராமங்களில் தெரு விளக்கு, குடிசை வீடுகள், விவசாயிகளுக்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் தனியாரிடம் சென்றால் கட்டணம் கடுமையாக உயர்ந்து விடும். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களை தன்னந்தியாக உயர்த்துவது போன்று மின்சாரமும் மாறிவிடும். இதனை மத்திய அரசு வைவிட வேண்டும். 


வலுக்கட்டாயமாக மின்சார சட்ட திருத்த கொண்டு வந்தால் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு சென்றால் இலங்கையில் ஏற்பட்டது போன்று இந்தியாவிலும் ஏற்படும். தமிழகத்திலும் மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் தேவை. பரந்தூர் விமான நிலையம் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவாகும். அதற்கு நிலம் மட்டுமே தமிழக அரச வழங்குகிறது. 


3 மடங்கு இழப்பீடு தரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் பொது மக்களை தமிழக அரசு நேரில் சந்திக்க வேண்டும். சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்த்தது, இன்றும் எதிர்க்கும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியது தெரியாது" என்றும் பேசினார். 


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தாளாளர் உட்பட 4 பேருக்கு ஐகோர்ட் ஜாமீன்


மேலும் படிக்க | 16 வயது சிறுமி பேசாததால் கழுத்தை அறுத்து ஒருதலை காதலன் வெறிச்செயல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ