தமிழகத்தில் வரும் ஏப்ரம் மாதம் 6ம் தேதி சட்ட பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அனல் பரக்கு பிரச்சாரத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் இன்று கரூரில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami), அதிமுக வேட்பாளர்கள் என்றாலே  ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெற்றவர்கள் என்றும், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) வேட்பாளர்கள் "டூப்ளிகேட்" என்றும்  தெரிவித்தார். 


வாக்காளர்கள் டூப்ளிகேட்டை  நம்பாமல், அசலான ISI வேட்பாளர்களை நம்பி, வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். கரூரில் போட்டியிடும்  அதிமுக (ADMK)  வேட்பாளரும் மாநில அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, ​​பேசிய முதலமைச்சர் " அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களால் எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளார். அம்மா (ஜெயலலிதா) அவருக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியை கொடுத்தார். இந்த தொகுதியில் மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கரூர் ஒரு அதிமுக கோட்டை. " என்றார்.


மக்கள் நல திட்டங்களை அதிகம் கொண்டு வந்ததால், அதிமுகவின் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மக்கள்  இதயங்களில் இன்றும் வாழ்கின்றனர் .


கரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை, கடுமையாக தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி,   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை ஊழல் கட்சி எனக் கூறுகிறார். செந்தில் பாலாஜி தான் ஊழல்களைச் செய்தார். அதனால்தான் அம்மா ஜெயலலிதா அவரை  வெளியேற்றினார் என்றார்.  திமுக ஒரு குடும்பக் கட்சி, அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். செந்தில் பாலாஜி போன்ற எவரும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்க முடியும், "என்று  எடப்பாடி பழனிச்சாமி மேலும் கூறினார்." 


ALSO READ | அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிச்சாமி..!!!


செந்தில் பாலாஜி எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றார். எப்போதும் 'தர்மம்' தான் வெல்லும் என்பதை வரலாறு  காட்டுகிறது. செந்தில் பாலாஜி  5 கட்சிகள்  மாறினார். இப்போது வரை மதிமுக, அதிமுக, திமுக, அமமுக, இப்போது மீண்டும் திமுக "என்று  தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறார் என முதலமைச்சர் கூறினார்." 


எங்கள் வேட்பாளர்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிமுக ஒரு ஜனநாயகக் கட்சியாகும், அதில் யார் வேண்டுமானாலும் உயர் பதவிகளை அடைய முடியும். நான், விஜயபாஸ்கர், அல்லது எங்கள் வேட்பாளர் யார் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வர முடியும், " என்று அவர் மேலும் கூறினார். 


தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும்.


ALSO READ | TN Election 2021: தமிழக தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி, அமித்ஷா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR