தமிழகத்தில், கொரோனா பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று சென்று மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

aதை அடுத்து முந்தைய மாதத்தில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டுக்கான கட்டணத்தையே, இந்த மாதத்திற்கும் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்த நிலையில், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, பொதுமக்கள் தாங்களே சுய மாக மின்சார ரீடிங்கை பார்த்து, அந்த தகவல்களை  மின்சாரய வாரியத்திற்கு அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்சார கட்டணம் செலுத்தலாம் என தமிழக  மின்வாரியம் அறிவித்துள்ளது.


எனவே தமிழகத்தில் மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை கணக்கிட்டுவதற்கான மின்சார ரீடிங்கை நுகர்வோரே கணக்கிட தமிழக மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் மீட்டரில் தற்போதைய காட்டப்படும் ரீடிங் அதாவது கணக்கை போட்டோ எடுத்து தங்களது பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளர்களுக்கு, வாட்ஸ்அப், கடிதம் அல்லது இ-மெயில் வாயிலாக அனுப்பி வைக்கலாம் என மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்கள் பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளர்களின் tஹிலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களை ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்புவோர் தங்களுக்கான மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO REA D | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்