ஆன்லைனில் விற்பனை ஆகுமா மதுபானம்? அமைச்சர் அளித்த விளக்கம் என்ன?
தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, ஆன்லைனில் மதுவிற்பனை செய்வது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், அது பற்றிய தகவல் தனக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அதை மறுபரிலீசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக உறுப்பினருமான தங்கமணி, ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் திட்டம் இருந்தால், அரசு அதை கைவிட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆன்லைன் மதுவிற்பனை பற்றி அரசு சிந்தித்து வருவதாக டாஸ்மாக் (Tasmac) அதிகாரிகள் தெரிவித்தாக குறிப்பிட்டார். இது குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்திய அவர், ஆன்லைன் மது விற்பனையின் போது ஆர்டர் செய்தவர் வெளியில் சென்றுவிட்டால், வீட்டிலுள்ள பெண்கள் மதுவை வாங்க நேரிடும். அப்போது அண்டை வீடுகளில் இருக்கும் அக்கம்பக்கத்தினர் அவர்களை தவறாக எண்ணும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். இதன் காரணமாக அரசு இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ALSO READ: பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி! ஓ.பி.எஸ்!
இதற்கு பதிலளித்துள்ள மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி (V Senthil Balaji), அரசாங்கத்துக்கு ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் திட்டம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து விவரித்த அவர், ஆன்லைனில் மதுபானங்களை விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மாக் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏப்ரல் 2022 முதல் ரூ. 500 ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் 25 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
திமுக (DMK) அரசு மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதற்காக அரசு சார்பில் சுமார் 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக பல பொருட்களின் கொள்முதல் முறை மாறியுள்ள நிலையில், பல மாநிலங்களில் மதுபானங்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR