மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் "நான் முதல்வன்" திட்டம்.  இந்த திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, அவர்களது திறமையை வெளிப்படுத்த "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாநில அளவிலான போட்டியில் 14 வயது முதல் 40 வயது குட்பட்ட அனைவரும் பங்கு பெற்று பயனடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர்? விளக்கம் அளிக்கும் ஜி.கே.வாசன்


குறும்படத்திற்கான தலைப்புகள்:


1) பள்ளிக் கல்வியில் சிறுவயதிலேயே திறன் மேம்பாடு கல்வி பயிற்சி முக்கியத்துவம் 


2) பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்?


3) தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்துவதற்கு வேலை வாய்ப்பு திறன்களை வழங்குதல் 


4) திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது?


5) டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள் 


6) நடைமுறை திறன் பயிற்சிகளின் முக்கியத்துவம் 


மேற்கண்ட ஆறு தலைப்புகளின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய ஆறு நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.  தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.  அது புனைக்கதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.  முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 என தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படத்திற்கு மட்டுமே வழங்கப்படும். 


புகைப்பட போட்டிக்கான தலைப்பு: 


1) தமிழகத்தில் அழிந்து வரும் பாரம்பரிய திறன்கள் 


உங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 01.02.2023.  பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகை இடுவதன் மூலம் பங்கேற்கலாம் மற்றும் socialmedia@naanmudhalvan.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம்.  இதில் வெற்றி பெறும் குறும்படதாரர்களுக்கு "நான் முதல்வன்" திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் & தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் மூன்று மாத கால இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in  இணையதள முகவரியை பார்க்கவும்.


மேலும் படிக்க | களம் தயார்! ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ