தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வேலை நிறுத்தத்துக்கு திமுக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் மேலான மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: பெஸ்ட் டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ரீப்பெய்ட் பிளான்கள்


இந்நிலையில், இந்த ஆண்டு அதற்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொது செயலாளர் எம். துரைபாண்டியன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்தார்.


இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28, 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், மேலும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் 28, 29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது, அன்றைய தினங்களில் பணிக்கு வந்த, வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறை வாரியாக காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது வேறு ஏதேனும் போராட்டங்களில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை பாதிக்கும், விதிகள் 20-ஐ மீறுவதாகும். உத்தேச வேலைநிறுத்தத்தின் நாட்களில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது. அன்றைய நாளுக்கான ஊதியம் அளிக்கப்படாது என்று தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR