Jio vs Airtel vs Vi: பெஸ்ட் டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ரீப்பெய்ட் பிளான்கள்

ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளதால், பெஸ்ட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 25, 2022, 07:02 PM IST
  • ஐபிஎல் 2022 நாளை தொடங்க உள்ளது
  • பெஸ்ட் ரீச்சார்ஜ் பிளானை தேடும் வாடிக்கையாளர்கள்
  • ஜியோ - ஏர்டெல் - வோடாஃபோன் ஐடியா ப்ரீப்பெய்ட் பிளான்கள்
Jio vs Airtel vs Vi: பெஸ்ட் டிஸ்னி ஹாட்ஸ்டார் ப்ரீப்பெய்ட் பிளான்கள் title=

Reliance Jio, Airtel மற்றும் Vodafone Idea நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான மற்றும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. தினசரி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் OTT சப்ஸ்கிரிப்சன் குறைந்த விலையில் கொடுக்கின்றன. ஐபிஎல் தொடங்க இருப்பதால், மூன்று நிறுவனங்கள் கொடுக்கும் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் திட்டங்களை தெரிந்து கொள்வோம். 

ஜியோவின் ரூ.601 திட்டம் 

ஜியோவின் ரூ.601 திட்டத்தில், நீங்கள் 3ஜிபி டேட்டா, 6ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒவ்வொரு நாளும் அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதில், நீங்கள் அனைத்து ஜியோ ஆப்களுக்கான சப்ஸ்கிரிப்சன் கிடைப்பதுமட்டுமின்றி டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவும் உண்டு. வேலிடிட்டி 28 நாட்கள்.

மேலும் படிக்க | ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்!

ஜியோவின் ரூ.419 திட்டம்: 

ஜியோவின் இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்குகளுக்கும் 28 நாட்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி தினசரி டேட்டா கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச அணுகலைப் பெறுவீர்கள். 

Vi இன் ரூ.601 திட்டம்:

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா, 16 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆகியவற்றுடன், நிறுவனத்தின் சிறப்பு Binge All Night, Weekend Data Rollover மற்றும் Extra Data போன்ற பலன்களையும் பெறுவீர்கள். வேலிடிட்டி 28 நாட்கள்.  இந்த திட்டத்தில், Vi Movies மற்றும் TV உடன் Disney + Hotstar -ன் இலவச சப்ஸ்கிரிப்சனும் கிடைக்கும்.

Vi இன் ரூ. 475 திட்டம்: 

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாள்தோறும் 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்பு போன்ற பலன்கள் கிடைக்கும். Binge All Night, Weekend Data Rollover மற்றும் Extra Data ஆகியவற்றுடன், இந்த திட்டத்தில் Vi Movies மற்றும் TVக்கான சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.699 திட்டம்

ஏர்டெல்லின் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் நாள்தோறும் 3ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்பு, அமேசான் பிரைம் வீடியோ 56 நாட்களுக்கு கிடைக்கும். ப்ரீமியம் உறுப்பினர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கிற்கான சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.

மேலும் படிக்க | OnePlus-ன் புதிய மாடல் : விலை என்ன தெரியுமா.?

ஏர்டெல் ரூ. 599 திட்டம்

ஏர்டெல்லின் 599  ரூபாய் திட்டத்தில் நாள்தோறும் 3ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்களிலும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 30 நாட்களுக்கு கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News