தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்: மூன்றாம் (Unlock 3) கட்ட கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் பொது முடக்கத்தில் இருந்த இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 முதல் யோகா (Yoga) நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் (Gymnasiums) கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. அதேநேரத்தில் தரப்படுத்தப்பட்ட வழிமுறைகளை (SOP) பின்பற்றப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 2020 ஆகஸ்ட் 31 வரை தொடர்ந்து மூடப்படும் என்றும், மெட்ரோ சேவைகள் (Metro), சினிமா அரங்குகள் (Cinema Halls) , நீச்சல் குளங்கள் மற்றும் பார்கள் (Bars) மூன்றாவது அன்லாக் கட்டத்திலும் தொடர்ந்து மூடப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.


ALSO READ |  தமிழகம் முழுவதும் மீண்டு முழு ஊரடங்கு... எது இயங்கும்?... இயங்காது?...


ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த அன்லாக் 3-க்கான (Unlock 3) வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, தமிழக அரசு (TN Govt) சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வரும் 10 ஆம் தேதி முதல்‌ உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி அளித்தார். மேலும்‌, இதற்கான நிலையான வழிகாட்டு செயல்‌ முறைகள்‌ தனியாக வெளியிடப்படும்‌. அவற்றை கட்டாயம்‌ கடைபிடிக்க வேண்டும்‌ எனவும் முதல்வர் கூறியிருந்தார். 


இந்தநிலயில், இன்று உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதன் முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.


ALSO READ |  Unlock 3 guidelines : இரவு ஊரடங்கு நீக்கம்; யோகா மற்றும் ஜிம்களை திறக்க அனுமதி