மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் தொடர்பாக மாவட்ட வருவாய் ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில் அது குறித்து அதிமுக தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கொண்டுவந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தரப்பிலும் பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது தனது கருத்துக்களை தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மே 22ஆம் தேதி மயிலாடுதுறையில் பழங்காலத்து முறையான பல்லக்கு முறையில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.


பயிலும் தினங்களுக்கு ஒரு அமைப்பு வேண்டுமென தெய்வீக பேரவை என்ற அமைப்பை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர் என்றும் அதனை அதற்கு பின்னர் வந்த அரசு அதனை நீக்கியது என அதிமுக மீது குற்றம் சாட்டினார்.


தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 45 சைவ வைணவ சக்திபீட அமைப்புகளின் கட்டுப்பாடுகளில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகளையும் அறங்காவலர் குழுவில் ஆதீனங்களையும் நியமித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | உள்ளாட்சித்துறை அமைச்சராகும் உதயநிதி? அன்பில் மகேஷ் ‘மாஸ்டர் பிளான்’?


யாரோ ஒருவர் போனார், அதனால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி கூறியுள்ளது. தமிழக முதலமைச்சரை சந்தித்து, இந்த அரசு ஆன்மிக அரசு என்று பாராட்டிய வரும் இதே  தருமபுர ஆதினம் தான் என்று தெரிவித்தார்


மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை கூட சந்தானத்துடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அப்போது கருத்து தெரிவித்த அவர் தமிழ் சார்ந்த மற்றும் தமிழை பின்பற்றி வரக்கூடிய பணியை தருமபுரம் ஆதீனம் செய்து வருவதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் தமிழ் சார்ந்த ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஒரு சிலர் இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள் என ஆதினம் தன்னிடம் தெரிவித்ததாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | இலங்கை மக்களுக்கு உதவ நிதி தாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


மேலும் ஒரு சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்குமாறு தன்னை வருவதாகவும் கூறினார். எனினும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


மனிதனை மனிதனாக பாராட்டும் இந்த ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சன்னிதானத்தில் பட்டின பிரவேசம் தொடர்பாக எந்தவித பிரச்சனையும் இல்லாத வகையில் தமிழக முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் மேலும் மே 22ஆம் தேதிதான் பட்டினப்பிரவேசம் என்பதால், கூடுதல் கால அவகாசம் இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தர்மபுரி சன்னிதானத்திடம் அரசு தொடர்ந்து பேசி முடிவு காணும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR