உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் சிக்கலில் செந்தில் பாலாஜி!
வேலை வாய்ப்பு மோசடி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக புதிய அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்ட வேலை வாய்ப்பு பணமோசடி தொடர்பான வழக்கில் புதிய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அமலாக்க இயக்குனரகம் சார்பில் 2021 ஆம் ஆண்டில், இந்த ஊழல் தொடர்பாக நான்கு வழக்குகளை பதிவு செய்தது. இதில் இரண்டு வழக்குகள் அரசுப் போக்குவரத்துத் துறையில் பேருந்து நடத்துனர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் மற்ற இரண்டு வழக்குகள் ஓட்டுநர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனம் தொடர்பானவை.
மேலும் படிக்க | திமுக - பிடிஆர் விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முக்கிய முடிவு!
இந்த நியமனங்கள் அனைத்தும் 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செய்யப்பட்டவை. இந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக் கோரி பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றமத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றமத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் பணமோசடி தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்து விட்டதாகவும், எனவே சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து பொறியாளர் தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த சில மாதங்களாகவே இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு தரப்பு வாதங்கள் கேட்டபின்னர், இன்று தீர்ப்பு அளித்தது. அதில் சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக இதுபோன்ற குற்றவழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது எனக்கூறி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும், சிறப்பு விசாரணைக்கு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும், இரண்டு மாதங்களுக்குள் வழக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இன்றைய தீர்ப்பில், நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் வி ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பணமோசடி முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரி உரிய முறையில் தொடரலாம் என்றும், சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கான கோரிக்கையை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.
மேலும் படிக்க | பாஜக இனிமேல் இதை செய்யவே முடியாது - திருமாவளவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ