சவுக்கு சங்கர் மீது வழக்கு... அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் கூறியது என்ன?

Savukku Shankar - Senthil Balaji: யூ-ட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தனது மீது ஆதாரமற்ற வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி சவுக்கு சங்கர் மீது நான்கு வழக்குகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 15, 2023, 04:07 PM IST
  • சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மனுக்கள் தாக்கல்
  • வழக்கறிஞர் பி.வில்சன், ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
  • அவதூறு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் மனுக்களில் குறிப்பிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் மீது வழக்கு... அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் கூறியது என்ன? title=

Savukku Shankar - Senthil Balaji: யூ-ட்யூப் பிரபலம், சவுக்கு சங்கர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் அவர் பிணையில் வெளியானார். சவுக்கு சங்கர்,  நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாகக் கடந்தாண்டு ஜூலை 22ஆம் தேதி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. 

உச்ச நீதிமன்ற ஜாமீன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கடந்த செப். 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு கடந்தாண்டு நவ. 11ஆம் தேதி விசாரித்தது. 

மேலும் படிக்க | M. K. Stalin: முதல்வர் விழுப்புரம் பயணம்-கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்!

அப்போது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர். 

மீண்டும் ஜாமீன்

ஆனால், ஜாமீன் அளிக்கப்பட்ட நவ. 11ஆம் தேதி அன்றே, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நவ. 17ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்கியும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர் அவதூறு

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களில்,'பல்வேறு யூ-ட்யூப் சேனல்களில், சவுக்கு சங்கர் அளித்த பேட்டிகளில், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை, ஏக்நாத் ஷிண்டே  கவிழ்த்ததைப் போல, தமிழ்நாட்டில் திமுக அரசை தான் கவிழ்த்து விடுவதாக தனக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதார்' என குறிப்பிட்டுள்ளார். டாஸ்மாக் பார்களை தான்  நடத்தி வருவதாகவும், அதனால் தன் மீது திமுகவினர் விரக்தியில் இருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளதாக அந்த மனுக்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல,  ட்விட்டர் பக்கத்தில் தனக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளதாகவும், அரசியல் விரோதிகளின் தூண்டுதலின் பெயரில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சவுக்கு சங்கரை அவதூறு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் மனுக்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியின் இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு... போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News