NEET தாக்கம் குறித்து 86342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்: ஏ.கே. ராஜன் குழு
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.
சென்னை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வால், தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு உருவாக்கப்பட்டது.
பொது மக்கள், நீட் தேர்வு (NEET Exam) குறித்த தங்கள் கருத்துக்களை இந்த ஆய்வுக்குழுவிடம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் (AK Rajan Committee) மூன்றாவது கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அதைத் தொடர்ந்து ஆய்வுக்குழு தலைவர் ஏ.கே.ராஜன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். நீட் தேர்வின் தாக்கம் குறித்து மொத்தமாக 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஏ.கே.ராஜன் கூறினார்.
மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைப் பற்றி கூறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன், "நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்றும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. சிலர் தேர்வு வேண்டாம் என்றும் சிலர் தேர்வு நடக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். பலர் தங்களது விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளையும் நன்றாக ஆராய்ந்து ஒருமாதத்திற்குள் அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருக்கிறோம். எங்களது ஆய்வு முடியாவிட்டால் அறிக்கை தாக்கல் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் திங்களன்று நடைபெறும்." என்று கூறினார்.
முன்னதாக, தமிழக (Tamil Nadu) சட்டமன்ற தேர்தல்களில், திமுக ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக தமிழகத்தில் இருந்து நீட் தெர்வு அகற்றப்படும் என கட்சி கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், அது தொடர்பான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழுவை அரசு ஏற்படுத்தியது. இந்த குழுவில் மருத்துவர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
ALSO READ: NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR