கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (TN Lockdown) வரும் 14ம் தேதி முடிய நடைமுறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள், மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி முடிய செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் கொரோனா நிவாரணமாக (Corona Relief) ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதன்படி கடந்த மாதம் 7 ஆம் தேதி கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் (Ration Shops) வழங்கப்பட்டது.


ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்


இந்நிலையில் இரண்டாவது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த திட்டத்தை கடந்த 3 ஆம் தேதி அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


எனவே இதற்காக நாளை முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 ஆம் தேதி முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.


ரேஷன் கடைகளில் (Ration Shops) அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ 
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம் 
கடலை பருப்பு- 250 கிராம் 
டீ தூள் -200கிராம் 
கடுகு- 100 கிராம் 
சீரகம்- 100 கிராம் 
மஞ்சள் தூள்- 100 கிராம் 
மிளகாய் தூள்- 100 கிராம் 
குளியல் சோப்பு 25 கிராம் – 1 
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 


ALSO READ | பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR