பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 12:40 PM IST
பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது. 

இதனால் கொரோனா (Coronavirus) பேரிடர் காலத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பொது விநியோகத்திட்டத்தின் கீழ் 20,000 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசு (Tamil Nadu Government) டெண்டர் விட்டுள்ளது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் இந்த இக்கட்டான சூழலில் மக்களின் தேவைக்காக அவசர கால டெண்டர் விடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, மணிகண்டன் தொடர்ந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு ரேஷன் கடைகளில் (Ration Shops) வழங்கப்படும் பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் பருப்பு, பாமாயில் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News