‘அது கையா இல்லை பேப்பரா’... தையல் போட ஸ்டாப்ளேர்ப்பின் பயன்படுத்திய நர்ஸ்
ஏற்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையலுக்கு பதிலாக ஸ்டாப்லர்பின் அடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி ஒருவர் கையில் அடிபட்டதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் குமாரசெல்வம் பணியில் இல்லாதபோது, அப்போது செவிலியர் அடிபட்ட இடத்திற்கு தையலுக்கு பதிலாக ஸ்டாப்ளேர்ப்பின் அடித்துவைத்து அனுப்பியுள்ளார். செவிலியர் மறுநாள் வந்து தையல் போட்டுக்குள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் இந்த நோயாளி இன்று காலை சென்று கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் குமார செல்வம் நான் அப்போது பணியில் இல்லை எனவும், அது செவிலியர் பார்த்த மருத்துவம் எனவும் கூறியுள்ளனர்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் இப்பொழுது அந்த ஸ்டாப்ளேர்ப்பின்னை மாற்ற முடியாது என கூறி மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்.
மேலும் படிக்க | சர்ஜிகல் ஸ்டேபிளர் பற்றிய விழிப்புணர் இல்லாததால் ஏற்காட்டில் பரபரப்பு
இந்த நிலையில் தையலுக்கு பதிலாக நோயாளிக்கு ஸ்டாப்ளேர்ப்பின் அடித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ