இன்று ஏற்காடு மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் தையலுக்கு ஸ்டேப்ளர் பின் பயன்படுத்தியதாக செய்தி வைரலாக பரவியது. இது குறித்த கருத்து தெரிவித்த மருத்துவர், சர்ஜிகர் ஸ்டேப்ளர் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்காட்டில் சேகர் என்பவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் கடந்த வாரம் மிஷினில் வேலை செய்யும் போது அவரது இடது கையில் பலத்த விட்டு காயங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உள்ளங்கையில் அடிபட்ட காரணத்தினால் தையல் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உடனடி தீர்வு காண வேண்டி சர்ஜிகல் ஸ்டாப்புலரை மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்ந்து அவருக்கு சர்ஜிகல் ஸ்டெப்ளர் பொருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டி அவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து மருத்துவரின் ஆலோசனை பெருமாறும் அறிவுறுத்தப்பட்டது. குடிபோதையில் இருந்ததால் சேகர் மருத்துவர் கூறியதை மறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்த சேகர் தனக்கு புத்தகங்களுக்கு அடிக்கக்கூடிய ஸ்டேபிளரை அடித்ததால் தான் தனது காயம் ஆறவில்லை என கூறிவருகிறார்.
மேலும் படிக்க | ‘அது கையா இல்லை பேப்பரா’... தையல் போட ஸ்டாப்ளேர்ப்பின் பயன்படுத்திய நர்ஸ்
இந்த நிலையில் மருத்துவ அலுவலர் குமாரசெல்வம் கூறுகையில்:
ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேகர் என்பவருக்கு அடிக்கப்பட்டது சர்ஜிகல் ஸ்டேப்லர் தான். யாரும் தவறாக சமூக வலைத்தளகங்களில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
சிகிச்சைக்கு சரியான முறையில் சேகர் வராதது தான் தவறு எனவும் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளாக சர்ஜிகல் ஸ்டேப்ளர் நடைமுறை தமிழகத்தில் உள்ளதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்காட்டில் சர்ஜிகல் ஸ்டேப்ளர் சிகிச்சை முறை நடைமுறையில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சர்ஜிகல் ஸ்டேப்ளர் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் பொதுமக்கள் நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ