மாணவர்களுக்கு நற்செய்தி... பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு... எப்போது தெரியுமா?
TN School Reopening Postponed: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10 என மாற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை (மே 10) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளனர்.
TN School Reopening Postponed: மே மாதம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் ஜூன் பிறக்கிறது. வழக்கமாக ஜீன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்துவிடும். வரும் ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்தது.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானதையும் காண முடிந்தது.
இருப்பினும், கடந்த சில நாள்களாக கோடை மழை சற்று ஆறுதல் அளித்து வந்தது. ஆனாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் சமீப நாள்களில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. எனவே, பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை என பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க | பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்... தொழிலாளி மரணம் - மருத்துவர்கள் கூறுவது என்ன?
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி, ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 9ஆம் தேதி வரையில் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்துவகைப் ப ள்ளிகளும் ஜூன் 10ஆம் தேதி திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது" குறிப்பிட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு நாள்களுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, கோடை விடுமுறைக்கு வெளியூரில் இருப்பவர்கள் இன்னும் கொஞ்ச நாள்கள் விடுமுறையை கொண்டாடிவிட்டு வர வாய்ப்புள்ளது. அதேபோல், பள்ளிகள் தரப்பிலும் சில முன்னேற்பாடுகளை செய்ய கால அவகாசம் கிடைக்கும் எனலாம்.
மேலும் படிக்க | சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ