கடந்த வாரம் கள்ளக்குறிச்சி பிளஸ் 2 மாணவியின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ் 2  மாணவி பள்ளி விடுதி அறையிலும், விருதாச்சலத்தில் பிளஸ் 2 மாணவி வீட்டிலும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.  அக் கூட்டத்தில் அரசின் திட்டங்களை அமல்படுத்துவது குறித்த சவால்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


அந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,


6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார். 


மேலும் படிக்க | Asteroid Bennu: சிறுகோள் பென்னுவின் ஆச்சரியமான மர்மங்களை அவிழ்க்கும் நாசா


விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என்றவர் , விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது , உடல்ரீதியாகம் மன ரீதியாகவும்  சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார். 


உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுவதாகவும்  இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து , விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் உள்ளதாக கூறினார். 


பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை துவக்கி வைத்த பிறகு , பள்ளிகல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. 


ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் , மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என கூறினார். 


மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால் , அவர்களை இதுபோன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னெம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் செயலி பற்றி அமைச்சர் கூறினார். 


கனியாமூர் நிகழ்விற்கு பிறகு பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை என கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளகுறிச்சியில் நடந்துள்ளது. 


குழந்தைகள் முழுமையாக தன்னெம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் என்றும் , இது போன்ற சம்பவங்களில் காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதில் இருந்து தப்பிவிட முடியாது.. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என கூறினார்.


மேலும் படிக்க | Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ