பங்களாதேஷ் நாட்டில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்த 28 , 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதில் இந்தியா,இலங்கை, நேபால், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் இருந்து 80 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த, ஆல் இந்தியா கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் 7 மாணவ மாணவிகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு மூன்று தங்க பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம், 3 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து பங்களாதேஷில் இருந்து சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் அவரகளது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் சீனிவாசன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து சென்ற ஏழு மாணவர்களும் மூன்று தங்கம்,இரண்டு வெள்ளி,3 வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.


இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்து உலக அளவில் நடைபெறக்கூடிய கராத்தே போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றுள்ள மாணவ,வ்மாணவிகளுக்கு தமிழக அரசு உதவியும்,vஊக்கமும் அளிக்க வேண்டும். இது அவர்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவியாக இருக்கும். கராத்தே போட்டிக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து தமிழக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளை கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி... அர்ஜென்டினா சாம்பியன்


தங்கப்பதக்கம் வென்ற சூர்யா கூறுகையில், மொத்தம் எட்டு பதக்கங்களை வென்று உள்ளோம். தங்களுக்கு தொடர்ந்து பயிற்சியாளர்க்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவுகாக வெற்றி பெற்றது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து போட்டிகளும் மிகவும் கடினமாக இருந்தது இருந்தபோதிலும் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம்.


தங்கப்பதக்கம் வென்ற வைபவி கூறுகையில், தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியம் கராத்தே ஒரு தற்காப்பு கலை இது அனைத்து பெண்களும் கற்றுக் கொள்வது நல்லது எனக் கூறினார்.


மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ