முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 3-வது தேசிய கைத்தறி தின விழாவில் பங்கேற்றினார். அப்போது அவர் பேசியது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினத்திற்கு இந்த விழா ஒரு முன்னோட்டமாக, முன்மாதிரி விழாவாக நடைபெறுகிறது.


கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11000 கைத்தறி நெசவாளர்களுக்கும், 54000 விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.


வரும் ஆண்டு பொங்கலுக்கு 3 கோடியே 36 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்க இருக்கிறோம்.


அரசுத் திட்டங்களான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தும் முகமை நிறுவனமாக கோஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது.


கைத்தறித்துறைக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்திய காரணத்தினால் தான் 1,156 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 964 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன.


கைத்தறி விற்பனைக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானிய நிதியானது 2017-2018-ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 867 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயனடைந்து வருகின்றன.


நெசவாளர்கள் மற்றும் நெசவினை சார்ந்த உபதொழில் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2004-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


நெசவாளர்கள் முத்ரா திட்டத்தின் மூலம் இது வரை 18 அயிரத்து 340 நெசவாளர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.


வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அஹிம்சா ரக பட்டுகள் கோ ஆப்டெக்சில் அறிமுகப்படுத்தப்படும். இயற்கை சாயமிடப்பட்ட பருத்தி சேலை ரகங்கள், திண்டுக்கல், கோவை வதம்பசேரி, திருச்சி மணமேடு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அதனால் தான் நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத்தந்த மாநில அளவில் சிறந்த கைத்தறி நெசவாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், கைத்தறியில் பருத்தி மற்றும் பட்டு ரகங்களில் சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகளும், தமிழ்நாட்டிலுள்ள சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டங்களும் அம்மா வழியில் நடைபெறும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இவ்விழாவில் 2017-2018-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த நெசவாளர் விருதின் வெகுமதியாக ஒரு லட்சம் ரூபாய், சான்றிதழ் மற்றும் பொன்னாடை, திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.ஆர்.ராஜசேகரனுக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக மொத்தம் 60 நெசவாளர்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் அளவிற்கு திறன்மிகு கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். இதேபோல ஒருங்கிணைந்த.


இவ்வாறு அவர் பேசினார்.