தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இன்று, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுளது.
மேலும், தமிழகத்தின் (Tamil Nadu) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யுக் கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் (TN Rain) எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், ஆக்ஸ்ட் 12ம் தேதி, ஒரு சில உள் மாவட்டங்களில் கனமழையும் ஏனைய பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
ALSO READ: China: கனமழை, பெரு வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள், பதபதைக்கும் காட்சிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR