China: கனமழை, பெரு வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள், பதபதைக்கும் காட்சிகள்

சீனாவில் பல முந்தைய பதிவுகளை முறியடிக்கும் வகையில் கனமழை பெய்து வருகிறது. சீன சாலைகளும் சுரங்கப்பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2021, 12:16 PM IST
  • சீனாவில் மழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • பல தசாப்தங்களாக மழையால் ஏற்படும் அச்சுறுத்தல் மோசமடைந்துள்ளது.
  • இந்த ஆண்டும் இயற்கையின் சீற்றம் சீனாவை ஆட்டிப்படைத்து வருகிறது.
China: கனமழை, பெரு வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள், பதபதைக்கும் காட்சிகள் title=

சீனாவில் மழையால் உண்டாகும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அங்கு பெய்து வரும் கனமழையால், மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் ஒரு சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்போக்கு காரணமாக 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ஒரு ரயில் வண்டிக்குள் மார்பளவு தண்ணீரில் சிக்கி பயணிகள் போராடுவதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுள்ளன.

சீனாவில் (China) பல முந்தைய பதிவுகளை முறியடிக்கும் வகையில் கனமழை பெய்து வருகிறது. சீன சாலைகளும் சுரங்கப்பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஹெனன் மாகாணத்தில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ, மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

“பெரு மழை காரணமாக ஜெங்ஜோவோ மெட்ரோவின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், அங்கு மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். நீரில் மக்கள் சிக்கிக்கொள்ள நிலைமை மோசமானது. இங்கு சிக்கியவர்களில் 12 பேர் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டனர்” என்று வீபோ போஸ்டில் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ: Watch Scary Video: இமாச்சல பிரதேசத்தில் அதிகன மழை, கடுமையான வெள்ளம்

சமூக ஊடகங்களில் (Social Media) பீதியைக் கிளப்பும் பல படங்கள் பகிரப்பட்டன. ஒரு ரயில் வண்டிக்கு உள்ளே வேகமாக அதிகரித்து வரும் நீரின் அளவுக்கு மத்தியில் பயணிகள் சிக்கி இருப்பதைக் காண முடிந்தது. மக்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வர, மீட்புப் படையினர் ரயில் வண்டியின் கூரையை உடைக்க வேண்டி இருந்தது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மற்றொரு புகைப்படத்தில் ஷெங்ஜோவில் சாலைகளில் நடந்து சென்ற மக்கள் அதிவேகமாக பாயும் நீருக்கு மத்தியில் மீட்கப்படும் பதபதைக்கும் காட்சிகளையும் காண முடிந்தது.

நகரத்துக்கான தகவல்தொடர்புகள் மழையால் பாதிக்கப்பட்டதால், நகரத்திற்கு வெளியே உள்ள உறவினர்கள் சீனாவின் சமூக ஊடக நிறுவனமான வீபோவிடம் மழையின் நிலை குறித்த தகவல்களைக் கோரினர்.

இப்பகுதியில் தொடர்ந்து வெள்ளத்தின் (Flood) தாக்குதல் இருந்து வருவதால், அதிகாரிகள் ஹெனன் மாகாணத்திற்கு மிக அதிக எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

சீனாவில் மழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கால் சாலைகள், பயிர்கள் மற்றும் வீடுகளுக்க்கு பலத்த சேதம் ஏற்படுகின்றது.

பல தசாப்தங்களாக மழையால் ஏற்படும் அச்சுறுத்தல் மோசமடைந்துள்ளது. காலநிலை மாற்றம் உலகெங்கிலும் பெருகிவரும் வெள்ள அபாயத்தை இன்னும் மோசமாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ALSO READ: China: இன்னும் கொரோனாவே முடியவில்லை; அதற்குள் பீதியை கிளப்பும் Monkey B வைரஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News