தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை (Madurai), புதுக்கோட்டை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை மற்றும் மிக கன மழை (Heavy Rain) பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழையும், ஏனைய மாவட்டங்களில், அனேக இடங்களில், மிதமான மழையும் பெய்யும்.


ALSO READ | அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB டேட்டா இலவசம்: TN Govt அதிரடி!!


நாளை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய, கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கன மழை; ஏனைய மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும். நாளை மறுதினம் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை, தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


வரும் 13 ஆம் தேதி, தமிழகத்தில், தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுராலகோடு, புத்தன் அணை, கொடைக்கானல் போர்ட் கிளப் பகுதிகளில் தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.


10.01.2021 : ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


ALSO READ | ஆண்டுக்கு 60000 ஓய்வூதியம் பெறுவதற்கான சிறந்த திட்டம் எது தெரியுமா?


11.01.2021 : ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


12.01.2021 : தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR