சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக 2020 டிசம்பரின் தொடக்கத்தில் ஏற்பட்ட கடுமையான நிவர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கணித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த கனமழை பெய்யக்கூடும்" என்று IMD இன்று காலை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கை:


ஜனவரி 13, 8:30 மணி வரை கனமான முதல் மிக அதிக மழை (Rain) பெய்யக்கூடும். ஜனவரி 14 இரவு 8:30 மணி வரை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அதன் பிறகு தற்போதைய கிழக்கத்திய காற்றலை பலவீனமடையும் என்பதால், ஜனவரி 14 முதல் தமிழகத்திற்கு அதிக மழைக்கான எச்சரிக்கை இருக்காது.


“அதிரமபட்டினத்தில் 13.5 செ.மீ என்ற அளவில் மிக அதிக மழை பெய்துள்ளது. அரியலூர் (10 செ.மீ) நாகப்பட்டினம் (8 சீ.மீ) மற்றும் காரைக்கால் (6.3 செ.மீ) ஆகிய இடங்களில் ஜனவரி 11 ஆம் தேதி காலையில் மிக அதிக மழை பெய்துள்ளது. இது ஜனவரி 12 வரை தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, மதுரை, தேனி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று IMD தெரிவித்துள்ளது.



ALSO READ: கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!


கேரளா மற்றும் புதுச்சேரியின் (Puducherry) சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும்.



"இலங்கை (Sri Lanka) கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல், கேரளா, லட்சத்தீவு மற்றும் மஹேவின் பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழையும், சில இடங்களில் லேசான இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் அளவு கணிசமாகக் குறையும். 2021 12 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கேரளா மற்றும் மஹே ஆகிய இடங்களில் கனமான முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும்” என்று IMD திங்களன்று தெரிவித்தது.


பிராந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.


“தெற்கு தமிழகத்தின் (Tamil Nadu) பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சிராப்பள்ளி, கருர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனு சென்னை ஆர்.எம்.சி தெரிவித்துள்ளது.


ALSO READ: தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR