Weather Forecast: தமிழகத்திலிருந்து விலகியது வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு வருமழை காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை அய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு வருமழை காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை அய்வு மையம் வெளியிட்டுள்ளது.
விலகியது வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை இன்று (22.01.2022) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியது.
22.01.2022 முதல் 26.01.2022 வரை:
22.01.2022 முதல் 26.01.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில் வானிலை நிலவரம் என்ன?
சென்னையை (Chennai) பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்களுக்கான (Fishermen) எச்சரிக்க ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய மழை மற்றும் வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள imdchennai.gov.in இணையதளத்தை காணலாம்.
ALSO READ | Leopard Hunt: 5 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது! சிக்கியது சிறுத்தை!
ALSO READ | பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை?
ALSO READ | கோவையில் இன்று ஜல்லிக்கட்டு- 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR