மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். பிப்.28-ம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைப்பதற்கான காலக்கெடு இன்று வரை இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை 2.60 கோடி பேர் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பது சில மாதங்களுக்கு முன் கட்டாயமாக்கப்பட்டது.  இது தொடர்பான அறிவிப்பும் அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தது முதல் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் இதை எளிதாக செய்து முடிக்க, அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம்கள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. 


மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் பணியை ஆன்லைனிலும் எளிதாக செய்து முடிக்கலாம்.  அதற்கான முழு செயல்முறையை இங்கே காணலாம்.


ஸ்டெப் 1: நுகர்வோர் TNEB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு அதாவது  https://adhar.tnebltd.org/Aadhaar/ -க்கு முதலில் செல்ல வேண்டும். 


ஸ்டெப் 2: இங்கே, உங்கள் சேவை இணைப்பு எண், தொலைபேசி (மொபைல்) எண், படத்தில் காணப்படும் டெக்ஸ் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா! பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்


ஸ்டெப் 3: அதன் பிறகு, மின் இணைப்புக்கான நபரின் பெயர் திரையில் தோன்றும். அதில், உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள தொடர்புக்கான நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்படும். 
- உரிமையாளர்
- வாடகைக்கு குடியிருப்பவர்
- உரிமையாளர், ஆனால், இன்னும் இணைப்பு உங்கள் பெயரில் மாற்றம் செய்யப்படாமல் மற்றொருவர் பெயரில் உள்ளது
-  வெளிநாடு வாழ் இந்தியரின் உறவினர்


ஸ்டெப் 4: இவற்றில் உங்களுக்கு ஏற்ற தேர்வை செய்து, டிக் செய்யவும். அதன் பின்னர், உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். உங்கள் ஒப்புதலை அளித்து ‘செண்ட் ஓடிபி’ என்பதை கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 5: ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். 


ஸ்டெப் 6: அதை டைப் செய்து, சமர்ப்பி (சப்மிட்) என்பதை கிளிக் செய்யவும். இதன் பின்னர் உங்கள் ஆதார் எண் மின் இணைப்புடன் இணைக்கப்படும்.


இந்த வகையில் பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் எளிதாக இணைக்கலாம். 


மேலும் படிக்க | வடமாநிலத்தவர்களின் செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது -டிடிவி தினகரன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ