குரூப் 2 எழுதப்போறீங்களா ? - கண்டிப்பா இத பாஃலோ பண்ணனும்!
சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாக தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் வரும் 21ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளது. 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 தேர்வர்கள் எழுத உள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 117 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 846 தேவர்களும், குறைந்தபட்சமாக உதகையில் மூன்று தேர்வு மையங்களில் 5 ஆயிரம் தேர்வர்கள் தேர்வு எழுத இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் மாதத்தில் மெயின் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் மூலம் குரூப் 2 பணியிடங்களுக்கு 116 பணியிடங்களும், 2ஏ பதவிகளுக்கு 5 ஆயிரத்து 416 காலி பணியிடங்களும் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள் :
இந்நிலையில் தேர்வு தொடர்பாக சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகத்தில் அதன் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 21 ம் தேதி தேதி காலை 9 மணிக்கு முன்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும் என்றும் ஹால்டிக்கெட் கலர் அல்லது கருப்பு வெள்ளை நகலை கொண்டு வரலாம் என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தேர்வு எழுத வரும் மாணவர்கள் முக கவசம் அணிவது அவரவர் விருப்பம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்கு வரும் தேர்வர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் வரும் காலத்தில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் மூலம் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்க படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | CBSE மாணவர்கள் கவனத்திற்கு, புதிய முறையில் போர்டு தேர்வுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR