CBSE மாணவர்கள் கவனத்திற்கு, புதிய முறையில் போர்டு தேர்வுகள்

CBSE இன் முதல் பருவத் தேர்வுகள் நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தொடங்க உள்ளன. இம்முறை தேர்வு முறையிலும் வாரியம் மாற்றம் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 04:33 PM IST
CBSE மாணவர்கள் கவனத்திற்கு, புதிய முறையில் போர்டு தேர்வுகள் title=

புதுடெல்லி: 10 மற்றும் 12வது சிபிஎஸ்இ வாரியத்தில் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முதல் கட்ட பொதுத் தேர்வுகள் இம்மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தொடங்குகின்றன. 12ம் வகுப்பு தேர்வுகள் 16 ஆம் தேதியும் 10ம் வகுப்பு தேர்வுகள் நவம்பர் 17 ஆம் தேதியும் துவங்குகிறது. இம்முறை தேர்வு முறையிலும் வாரியம் முக்கிய மாற்றம் செய்துள்ளது.

தேர்வு MCQ முறையில் நடைபெறும்
CBSE தனது பாலிசியை மாற்றியுள்ளது. இதன் கீழ், இப்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ வாரிய மாணவர்களுக்கான தேர்வுகள் இரண்டு முறை நடைபெறுகின்றன. போர்டு தேர்வுகளின் (Board Exams) இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நிறைவடையும். CBSE படி, இந்த முறை வாரியத் தேர்வின் மாணவர்களுக்கு 20 நிமிடங்கள் படிக்க நேரம் வழங்கப்படும். முன்னதாக இந்த நேரம் 15 நிமிடங்களாக இருந்தது. முதல் நிலை வாரியத் தேர்வுகளில் MCQகள் மட்டுமே கேட்கப்படும். இந்த MCQ தேர்வு 90 நிமிடங்கள் இருக்கும்.

ALSO READ | CBSE 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி: இந்த தேதியில் அட்மிட் கார்ட் கிடைக்கும்

50- 50% பாடத்திட்டத்தின் விநியோகத்தால் மன அழுத்தம் குறைந்தது
10ம் வகுப்பு (Class 10) மாணவி தீப்தி சர்மா கூறுகையில், இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுவது நல்லது. 50- 50 சதவீத விநியோகம் காரணமாக பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிய தேர்வு முறை குறித்தும் ஆர்வமாக உள்ளது. டெல்லியில் வசிக்கும் 12 ஆம் (Class 12) வகுப்பு மாணவர் உமாங் அகர்வால் கூறுகையில், இந்த வாரியத் தேர்வு முறை அனைத்து மாணவர்களுக்கும் முற்றிலும் புதியது, எனவே மனதில் பல வகையான குழப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த தேர்வுகள் பற்றி பயம் இல்லை.

தேர்வு மையங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம்
தேர்வின் போது மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ படி, அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா நெறிமுறை கண்டிப்பாக பின்பற்றப்படும். ஒரு மையத்தில் அதிகபட்சமாக 350 மாணவர்கள் தேர்வு எழுதலாம். மாணவர்களுக்கு இடையே ஆறு அடி இடைவெளி பராமரிக்கப்படும். தேர்வு மையத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ALSO READ: வைரலாகும் CBSE 'Date Sheet' ; CBSE கூறுவது என்ன..!!! 

காலை 11 மணி முதல் தேர்வுகள் நடைபெறும்
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் கட்ட போர்டு தேர்வுகளுக்கான சிபிஎஸ்இ வெளியிட்ட தேதி அட்டவணையின்படி, சிறு தேர்வுகள் நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தொடங்குகின்றன. அதே நேரத்தில், முக்கிய பாடங்களுக்கான 12ம் வகுப்பு வாரியத் தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வு Sociology மற்றும் கடைசி தேர்வு Home Science ஆகும். இந்த தேர்வுகள் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். அதே நேரத்தில், 10ம் வகுப்பு முக்கிய பாடங்களுக்கான முதல் கட்ட பொதுத்தேர்வு நவம்பர் 30ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த தேர்வுகள் டிசம்பர் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. 10ம் வகுப்புக்கு, முதல் தேர்வு Social science பாடமாகவும், கடைசி தேர்வு English ஆகவும் இருக்கும்.

12 ஆம் வகுப்பு அட்டவணை
3 டிசம்பர் - English
6 டிசம்பர் - Mathematics
7 டிசம்பர் - Physical Education
8 டிசம்பர் - Business Studies 
9 டிசம்பர் - Geography
10 டிசம்பர் - Physics
11 டிசம்பர் - Psychology
13 டிசம்பர் - Accountancy
14 டிசம்பர் - Chemistry
15 டிசம்பர் - Economics
16 டிசம்பர் - Hindi
17 டிசம்பர் - Political Science
18 டிசம்பர் - Biology
20 டிசம்பர் - History
21 டிசம்பர் - Computer Science
22 டிசம்பர் - Home Science

10 ஆம் வகுப்பு அட்டவணை
30 நவம்பர் - Social Science
2 டிசம்பர் - Science
3 டிசம்பர் - Home Science
4 டிசம்பர் - Mathematics
8 டிசம்பர் - Computer Application
9 டிசம்பர் - Hindi
11 டிசம்பர் - English

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் நவம்பர் 30ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

ALSO READ:CTET தேர்வுகளுக்கான தேதிகளை வெளியிட்டது CBSE 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News