ஒரே நாளில் தமிழகத்தில் 4328, சென்னையில் 1140 பேருக்கு COVID-19 பாதிப்பு- முழு நிலவரம் என்ன?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1,140 பேர் பதிப்படைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu COVID-19 Updates) இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் (Chennai Coronavirus) மட்டும் 1,140 பேர் பதிப்படைந்துள்ளனர். அதேபோல இன்று மாநிலம் முழுவதும் 66 பேர் கொரோனா நோயால் (Corona Death) இறந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, இதுவரை தமிழகத்தில் 1,42,798 பேர் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் எண்ணிக்கையில் பார்த்தால், சென்னை 78,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 16,54,008 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில், இதுவரை 92,567 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேநேரத்தில் 48,196 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் (Tamil Nadu) இறப்பு எண்ணிக்கை மொத்தமாக 2,032 ஆக அதிகரித்து உள்ளது. முழு விவரம் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளது.
கொரோனா புதுப்பிப்பு : ஜூலி 13, 2020
இன்று எண்ணிக்கை- 4328
சென்னை - 1140
மரணம் - 66
வெளியேற்றம் - 3035
சோதனை எண் - 44,560
ALSO READ | காற்றில் COVID-19 1 மணி நேரத்திற்கும் மேலாக உயிருடன் இருக்கும்!
மொத்த நிலவரம்:
செயலில் உள்ள வழக்குகள் - 48,196
போஸ்டிவ் வழக்கு - 1,42,798
சென்னை வழக்கு - 78,573
இறப்பு எண்ணிக்கை - 2,032
வெளியேற்றம் - 92,567
சோதனை எண் - 16,54,008
ALSO READ | கொரோனா தடுப்பூசி: மனிதர்கள் மீது 'சோதனை' நடத்தி வெற்றி பெற்ற 'முதல்' நாடு!