இன்றைய நிலவரம்: கொரோனா இன்னும் இருக்கிறது; பாதுகாப்பாக இருங்க! இன்று 2,608 பேருக்கு தொற்று
தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,22,011 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில் இன்று 3,924 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 687,388 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ALSO READ | தமிழ அரசு அதிரடி!! மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அரசாணை வெளியீடு