ட்ரக்கிங், பாராசூட் போன்ற சாகசச் சுற்றுலா விரைவில் தமிழகத்தில் அறிமுகம் - சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
சாகசச் சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
சாகசச் சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாள்களிடம் அவர் பேசியதாவது, ‘தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பல்வேறு ஏஜென்சிகள் உள்ளனர். அவர்கள், சுற்றுலா பயணிகளை பல்வேறு திட்டங்களைச் சொல்லி அழைத்துச் சென்று வருகின்றனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தவண்ணம் உள்ளன. எனவே, தமிழக அரசு இதை முறைப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
மேலும் படிக்க | Tourism: ஹெலிகாப்டரில் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க போகலாமா?
ஏனென்றால் மலைகள், சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பற்ற முறையிலும், எவ்விதமான விதிமுறைகளும் கடைபிடிக்காமல் தங்குகின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் பல நிகழ்கின்றன. அதனால் சாகச சுற்றுலாவை தமிழக அரசே ஏற்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. சாகச சுற்றுலா என்றால் ட்ரக்கிங், பாராசூட் போன்ற சாகச பயணங்களைச் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இதைப் பயன்படுத்தி போலியான ஏஜென்சிகள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுகின்றனர்.
எனவே, இதை முறைப்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல், முறையாக பதிவு செய்துள்ள ஏஜென்சிகளை சுற்றுலா பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சொகுசு கப்பல் சுற்றுலா பயணமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். ஜூன் மாதத்தில், சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும் வகையில் 2 நாள் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் தொடங்கப்படவ உள்ளது. அதேபோல், தனியார் சொகுசு கப்பல் மூலம் நடைபெறவுள்ள சுற்றுலா திட்டங்களுக்கும் சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்கும்’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சுவிட்ஸர்லாந்திற்கு இணையாக கார்கிலை மேம்படுத்தும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR