கார்லில் மிகச் சிறந்த சாலை வசதி மற்றும் விமான போக்குவரத்து வசதியோடு சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பட்டு விட்டல், சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்கள், இனி கார்கில், டிராஸ் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள்.
உலகில் சுற்றுலாத் துறையில் (Tourism) சுவிச்ஸர்லாந்திற்கு இணையாக கார்கில் பகுதிக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காக, சுற்றுலாப் பயணிகளுக்கான பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
லேவிலிருந்து கார்கில் செல்லும் சாலைக்கு சுற்றுலா நெடுஞ்சாலை என்று பெயரிடப்படும்.
இந்த திட்டத்தை மத்திய அரசின் (Central Government) கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தயாரித்துள்ளது. லே-கார்கில் இடையே சுமார் 230 கி.மீ நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும். இதனால் லேவிலிருந்து கார்கில் செல்வதற்கான பயணம் மிகவும் இனிமையாகதாக இருக்கும்.
லேவிலிருந்து கார்கில் வரை ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் 'ஆக்ஸிஜன் பார்லர்' திறக்கப்பட உள்ளது.
ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பிரஹலாத் சிங் படேல், "லே-லடாக் முதல் கார்கில் செல்லும் சாலையில் பொது வசதிகள் இல்லை" என்றார். அதனால், நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 20 முதல் 25 கிலோமீட்டருக்கும் ஆக்சிஜன் பார்லர் திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆக்ஸிஜன் அமைப்புடன் ஒரு மருத்துவ வசதி யும் ஏற்படுத்தப்படவேண்டும். குப்பை மேலாண்மை செய்ய வேண்டும். இந்த உள்கட்டமைப்பை அரசாங்கம் அமைத்து கொடுக்கும், ஆனால் அது உள்ளூர் கிராம மக்களால் நடத்தப்படும். என அவர் மேலும் கூறினார்.
லே-லடாக் மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பாரம்பரிய இடங்களைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது. இந்நிலையில், லேவிலிருந்து கார்கிலுக்கு செல்லும் வழியில், உள்ள பாரம்பரிய தலங்கள் குறித்த தகவல்கள் அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து கிடைக்கும் என கூறிய மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல், லே-கார்கில் சாலையை சுற்றுலா நெடுஞ்சாலையாக மாற்றுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கலாம் என்றார்.
2019 ஆகஸ்ட் மாதம் லடாக் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்ட பின்னர், மோடி அரசு இப்பகுதியின் வளர்ச்சியில் உள்ளது. கார்கிலை சுற்றுலா பகுதியாக மேம்படுத்தும் உள்ளூர் மக்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளனர். லடாக் பாராளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் கூறுகையில், 1999 ஆம் ஆண்டு யுத்தத்தின் அடையாளமாக, மக்கள் கார்கிலைப் பார்க்கிறார்கள். ஆனால், கார்கில் ஒரு அமைதி மண்டலமாக இப்போது மாறியுள்ளது, இது ஒரு போர் மண்டலமாக இப்போது இல்லை. இங்கு சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. லே-லடாக் மற்றும் கார்கில் சுற்றுலா மையாக மாறினால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் மேலும் கூறினார்.
ALSO READ | குடியரசு தினத்தன்று தேசிய கொடி அவமதிக்கபட்டதை கண்டு நாடு அதிர்ச்சி: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR