திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அருகே முக்கொம்பு மேலணை சுற்றுலா தலத்திற்கு வந்த காதல் ஜோடியில், காதலனை விரட்டிவிட்டு, 17 வயது சிறுமியான காதலியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், திருவெறும்பூர் தனிப்படையை சேர்ந்த ஒரு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட, 4 போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கண்ணாங்குடியை சேர்ந்த இளைஞரும் துவாக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு இந்த காதல் ஜோடி சுற்றுலா தளங்களில் ஒன்றான திருச்சி முக்கொம்பு மேலணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்கு திருவெறும்பூர் சரகத்தில் உள்ள தனிப்படையை சேர்ந்த திருவெறும்பூர் காவல்‌ நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் உள்ள சங்கரபாண்டி, நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், துவாக்குடி காவல் நிலைய போலீசார் சித்தார்த் ஆகிய நான்கு பேர் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | டிடிஎப் வாசன் யூடியூப்புக்கு தடை... பைக்கை எரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் காட்டம்


இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்த காதல் ஜோடி இடம் முதலில் தகராறு செய்து பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முசிறி மற்றும் திருவெறும்பூர்  சேர்ந்த காவல் சரகத்தை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் .


திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உரிய விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையினரே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ