திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை!

திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2023, 08:56 AM IST
  • முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை.
  • குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீட்டிலும் சோதனை.
  • சென்னை புறநகர்ப் பகுதிகளில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை! title=

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, பூந்தமல்லி சவிதா மருத்துவமனை, குரோம்பேட்டையில் உள்ள எம் பி ஜெகத்ரட்சகன் வீடு, தி.நகரில் உள்ள ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  தி நகர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜெகத்ரட்சகருக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்

அடையார் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் தாம்பரம் பகுதியில் உள்ள பாரத் யூனிவர்சிட்டி கல்லூரி, பல்லாவரத்தில் உள்ள வேலா மருத்துவமனை, பூந்தமல்லி சவிதா மருத்துவமனை, பள்ளிக்கரணை பாலாஜி மெடிக்கல் கல்லூரி, டி நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.  சோதனை நடைபெறும் இடங்களில் சுமார் 1000 ஆயுதப்படை போலீஸ்சாரி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவருடைய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை முதல் இவருக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த வருகின்றனர்.

மேலும் எம்பி ஜெகத்ரட்சகன் பல நிறுவனங்களில் தற்போது முதலீடு செய்துள்ளதாகவும் அதற்கு முறையான வரி செலுத்தவில்லை என்பதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளன.  மேலும் ஜெகத்ரட்சகன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளிலும், முன்னாள் மத்திய தொழில் துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகவும் பதிவி வகித்துள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், மேலும் இவர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் படிக்க | எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News